Wednesday, January 19, 2011

வெள்ளை விநாயகரே

வெள்ளை விநாயகரே எமது வீட்டின் முன்
இருக்கும் முதற் கடவுளே !
தங்க உடை உடுத்தியே அருள் பாளும்
ஈசனின் மைந்தனே !
அமைதியை விரும்பும் சக்தியின் மகனே !
உனை வணங்காது சென்றதில்லை !
அருள்வாய் என் அப்பனே !

அழைப்பது எப்போது

பால் வண்ண மேனிகொண்டு
குயில் போல கானத்திலே
நிலை மறந்து இமை மூடி ரசித்திட
பிறந்திட்ட பெண் மயிலே
மாலை சூடி மையல் கொள்ள
எனை அழைப்பது எப்போது ?

Friday, January 14, 2011

வந்தாள் தை

தை மாதம் பிறந்ததே!
கவலை எல்லாம் தொலையவே!
பொங்க வைப்போம் பானையில்!
நன்றி சொல்வோம் நல்வேளையில்!
கரும்பு தின்ன நேரமாச்சு!
கதை பேச நாமும் கூடியாச்சு!
கன்னி பொன்னுக பார்க்கையிலே!
துடிப்புடனே விளையாடிடுவோம் !

விடை கொடு ஆண்டே

தமிழ் ஆண்டின் கடைசி நாளே
விடை கொடு எனக்கு நல்
விடை கொடு !
தீமை தனை கொளுத்தி
நன்மை தனை எடுத்து போக
பழையன கழிதலும்
புதியன புகுதலுமான
வந்ததே போகியே !

Thursday, January 13, 2011

வரவேணும் தை பொங்கல்

உதிக்கும் சூரியனை உளமார வணங்கவே!
இனிக்கும் கரும்பினை கடித்து தின்னவே!
இஞ்சி மஞ்சள் கோர்த்து மாலை செய்யவே!
அதை பானை இரண்டு அணிந்து கொள்ளவே!
நம் குடும்பம் சூழ அரிசியிட்டு அடுப்பில்
வைத்த பானை பொங்கவே !
குதித்து குதித்து
'பொங்கலோ பொங்கல் '
என்று சொல்லியே !
ஒன்றிலே வெண்பொங்கல் மற்றதிலே
சர்க்கரை பொங்கல் தனை
இலையிலே இட்டு
சூரியனுக்கு படைக்கவே !
கண் மூடி நன்றி சொல்ல
வரவேணும் தை பொங்கல் நம்
தமிழ் பொங்கல் !

Wednesday, January 12, 2011

கண்டுனர்வேன் உனை

உடை நெகிழ கை காக்கும் அங்கன
துயர் அகல உதவும் நட்பே !
நகுதல் இன்றி இடித்துரைபதாம் நட்பே!
உனை கண்டுனர்வேன் ஊரார்
கதைக்கயிலே !
என் உள் நெஞ்சம்
மகிழயிலே !

தமிழ் வாழ்க

தமிழ் மொழி போலொரு மொழி உண்டோ !
தமிழ் தாய் வாழ்த்து போலொரு பாடல் உண்டோ !
தமிழ்நாடு போலொரு தேசம் உண்டோ!
வள்ளுவனை போலொரு ஞாநி உண்டோ!
கம்பனை போலொரு கவி உண்டோ!
ஈடில்லா உயிர்க்கு இணையில்லா
தமிழ் வாழ்க !

Tuesday, January 11, 2011

என் கவிதை

ஒய்வு நேரத்தில் ஒரு கவிதை!
ஓடோடி வா என் கவிதை!
வாசிக்க தோன்றும் கவிதை!
எல்லாரும் ரசிக்கும் கவிதை!
எழுதி முடித்தேன் ஓர் கவிதை!
இது என் கவிதை!
முத்தமிட்டு முத்தமிட்டு வாசிக்க
இது ஒரு நல்ல கவிதை!

Friday, January 7, 2011

நல் வாழ்வு

கற்றதோ ஓரிரண்டு !
கல்லாதார் பலரிருக்க
இவ்வுலகில் கீழார்
மேலார் இலர்

பொருளின் மேல் பற்றுடையோர்
கோடிபேர்
பெண்டிர் மேல் காமுடையோர்
பாதிபேர்
என்றிருக்க

நீயும்
அவ்வாறின்றி நல் வாழ்வு
வாழ்ந்திடடா !

அறிவியல்

அறிவியல் ஏற்றத்திலே !
அறியாதார் முற்றத்திலே !
தெரிந்து கொள் அதனை
புரிந்து கொள் !
நாளும் வளரும் அதனால்
நாமும் உயர்வோம் !
தொய்வின்றி படித்திடு !
புதுமை பல புகுத்திடு !

கடவாமல் கட

உமக்கு நல்லார் எல்லாம்
நல்லார் இலர்,
உமக்கு தீயர் எல்லாம்
தீயர் இலர்,
மதியின் துணையோடு
வாழ்வினை கடவாமல் கட !

மறந்துவிடு என்றதால்

உன்னால் எனக்கு நல்லபெயர்!
கைபேசி கட்டணம் குறைந்தது!
நல்லா உழைகிறேனாம் அலுவலகத்தில்!
இரவில் நல்ல உறக்கம்!
மனதிலே தெளிவு!
அம்மா அறிவார் ஏன் என்று!
இதுவெல்லாம் நீ மறந்துவிடு என்றதால்!
நெஞ்சம் வலிக்கிறது இதை சொல்லிக்கொள்ள நீ இல்லாதபோது!