யாவரும் நலம்
Wednesday, March 2, 2011
நாளது மீளாது
கள்ளுரும் உன் நெஞ்சை களவாட வேணும்
உள்ளுர ஆசை உன்னோடு உறவாட வேணும்
சொல்லாத காதல் நெஞ்சோடு கிடக்கு
பொல்லாத பாசாங்கு ஏனடி உனக்கு
நோக்காது சென்றால் தாங்காது என் உள்ளம்
நினையாது போனால் மீளாது என் நெஞ்சு
வங்க கடல் வாலிபன்
வங்க கடல் வாலிபன் நான்
தங்க உடல் மேனகை நீ
காதல் வலை விரித் தேன்
என் நிலை உணர சிரி தேன்
கல் தேய ஊரும் கட்டரும்பு
புள் மேய போகும் காட்டருது
கல் போல் உன் மனம் கரையும்
புல் போல என் காதல் வளரும்
எகிப்து
பல்லாயிரம் வரலாறு கண்ட
நைல் எனும் ஜீவ நதி
சிங்க முக பிரமிடுகள்
அசர ஏற்பட்ட புரட்சி!
திறனற்ற அதிபரையே தூர
தேசம் ஓட செய்ய ஒன்று
கூடிய புரட்சி மக்கள்!
உலகம் வியக்க அறப்போர்
செய்து வெற்றி கண்ட
ஆப்ரிக்கா எகிப்து மக்கள்!
மக்களாட்சி மலர தேவை
ஒரு தேர்தல் வேணும்
மக்கள் உரிமை பெற!
வரிசை
எதுகை மோனை வைத்து
எழுத வேணும் கவிதை
ஒன்று
ஒப்பற்ற பொருளையும்
உணர்த்த வேணும் வரியில்
இரண்டு
அண்டம் பூர புகழும்
பிரம்ம அரி சிவன் மூர்த்தி
மூன்று
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)